‘நவம்பர் 25′

 

நவம்பர் 25

27.5.2011- கோலாலும்பூர் தியான் ஹாவ் மண்டபத்தில் செம்பருத்தி இதழ் ஏற்பாடு செய்த மாலை விருந்தோடு கூடிய செம்பருத்தி விருது நிகழ்வில் கா.ஆறுமுகம் தொகுத்து அந்நிகழ்வில் வெளியீடு கண்ட ‘நவம்பர் 25′ எனும் நூல் குறித்து பேசினேன்.

- ம.நவீன்

Continue reading ‘நவம்பர் 25′

பொது இயக்கங்களின் சுயநலமும் அதிகாரமும்

இன்றைய நவீன காலத்தில் ஒரு தனிமனிதனின் இயக்கச் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? இந்தக் கேள்விக்குப் பிறகு உருவாகும் சோர்வான மனநிலையைத் தவிர்க்க முடிவதில்லை. இயக்கம் என்பதைச் சமூகத்தின் மையத்திலிருந்து தனிநபர் மையத்திற்குத் தகர்த்துக் கொண்டு வரும் ஒரு அயோக்கியத்தனமான காலக்கட்டத்தில்தான் இன்றைய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

மலேசியாவில் அரசியல் கட்சியில் பதவிகளில் இருப்பவர்கள், மற்ற சமூக இயக்கங்களிலும் பதவி வகிப்பவர்களாக இருந்தால் தன்னுடைய அரசியல் அடையாளத்தை Continue reading பொது இயக்கங்களின் சுயநலமும் அதிகாரமும்

மாடறுக்கும் சிவம்

ஊர் வரண்ட
நாளில்
நான் ஆத்திகனானேன்

Continue reading மாடறுக்கும் சிவம்

“அர‌சாங்க‌த்திற்குத் தேவை ந‌ம்மை நாமே குறை சொல்லிக்கொள்ளும் ஏமாளித்த‌ன‌ம்”

கடந்த ஆண்டு பி.உதயகுமாரிடம் பதிவு செய்யப்பட்ட நேர்காணல் இது. அவர்களின் நிலைப்பாட்டை விளக்கும் முழுமையானப் பதிவாக இதைக் கருதுகிறோம்

வ‌ழ‌க்க‌றிஞ‌ர் பி.உத‌ய‌குமார் 1961இல் ந‌வ‌ம்ப‌ர் மாத‌ம் ஏழாம் திக‌தி பிற‌ந்தார்.இவ‌ர் கிள‌ந்தான் மாநில‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்.உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ளின் க‌வ‌ன‌த்திற்கு ம‌லேசிய‌த் த‌மிழ‌ர் நிலையினை திசை திருப்பிய‌ ‘ஹிண்ட்ராப்’ இய‌க்க‌த்தின் ஆலோச‌க‌ர் இவ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. ஒரு ல‌ட்ச‌த்துக்கும் மேலான‌ ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ள் க‌ல‌ந்துகொண்ட‌ அந்த‌ப் பேர‌ணியைத் தொட‌ர்ந்து இவ‌ரும் இத‌ர‌ நான்கு வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ளுக்கும் சுமார் ஓன்ற‌ரை ஆண்டு உள்நாட்டு பாதுகாப்புச் ச‌ட்ட‌த்தின் கீழ் த‌டுத்துவைக்க‌ப்பட்ட‌ன‌ர். இன்றும் மிக‌ உற்சாக‌மாக‌ ச‌மூக‌ப் ப‌ணியில் இய‌ங்கி வ‌ரும் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் உத‌ய‌குமார் அவ‌ர்க‌ளை நேர்காண‌ல் செய்ய‌ என்னுட‌ன் யுவராஜன், சிவா பெரியண்ணன், மணிமொழி ம‌ற்றும் தோழி வ‌ந்திருந்தன‌ர். எல்லா தயார் நிலைக்குப் பின் அவ‌ருக்காக‌ அலுவலகத்தில் காத்திருந்தோம். அன்புடன் எங்களை வரவேற்ற வழக்கறிஞர் உதயகுமார் ஓர் சிறிய அறிமுகத்திற்கு பின் எங்களுக்கு எந்தச் சிரமும் தராமல் பேசத் தொடங்கினார்.

Continue reading “அர‌சாங்க‌த்திற்குத் தேவை ந‌ம்மை நாமே குறை சொல்லிக்கொள்ளும் ஏமாளித்த‌ன‌ம்”

மீண்டும் இண்டர்லோக் : ‘நியாட்டின்’ பிற்போக்குத்தனம்

NIAT
NIAT

 

 

 

 

 

அண்மையில் NIAT (National Interlock Action Team) ஒரு சந்திப்பை தான் ஶ்ரீ சோமா அரங்கில் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வுக்கு முன்தினம் அவர்கள் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் இண்டர்லோக் நாவல் தடைசெய்வதில் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் என்ற பட்டியலில் என் பெயரையும் இணைத்து நிகழ்வுக்கு வருகை தரவேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்கள். அன்பாக அழைத்தால் போகாமல் இருக்க முடியுமா என்ன? சென்றேன். என்னுடன் மூத்தப் பத்திரிகையாளர் பெரு.அ.தமிழ்மணி அவர்களும் வந்திருந்தார். சிறிது நேரத்தில் நண்பர் சிவா பெரியண்ணனும் இணைந்து கொண்டார்.
Continue reading மீண்டும் இண்டர்லோக் : ‘நியாட்டின்’ பிற்போக்குத்தனம்

உரிமைதான் புரட்சியின் எல்லை

(மலேசிய இந்தியர்களின் உரிமைகளை நடைமுறை அரசியல் – சமூக – பொருளாதார அமைப்புமுறை ஒடுக்குகிறது. இதனைப்பற்றிக் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கருத்துரைத்துவரும் இக்கட்டுரையாசிரியர், தமது ஆய்வினை வெளிப்படுத்தும் நோக்கோடு இதனை இங்கே வழங்குகிறார். ஒடுக்கப்படும் சூழ்நிலையில், இந்தியர்கள் தங்களை ஓர் இனவாதப் பிரிவினராக அடையாளம் கொண்டு மேற்கொள்ளும் போராட்ட உத்திகள் ஒரு வழிமுறையாகுமா? என்ற வினாவுக்கு விடையளிக்க முற்படுகிறார் – ஆசிரியர்) Continue reading உரிமைதான் புரட்சியின் எல்லை

சிறுகதை: என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி

பூச்சாண்டி பேசுகிறது

அசரீரிகளின் குரல் எப்பொழுதும் மேலிருந்துதான் ஒலிக்கும்.  அசரீரிகள் ஏற்கனவே பதிவுச் செய்யப்பட்ட தனது ஒவ்வொரு குரலையும் அறையின் வெற்றிடங்கள்தோறும் எறிந்து கொண்டிருக்கிறார்கள்.

“சனியனெ பெத்துப்போட்டுட்டு என்னா செய்ய செய்ய முடியும்?”

அசரீரிகளின் குரல்கள் எனக்கு சாதகமாகவும் முரணாகவும் எனக்காக உயிர்பெற்று அறைக்குள் அலைந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு அசரீரிகளுக்கும் வயதும், பிறப்பும் , மரணமும் உருவமும் இருந்தன. Continue reading சிறுகதை: என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி

பூக்காரப் பாட்டியிடமிருந்த காலம்

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு

பழைய வீடிருந்த

தோட்டத்திற்குச் சென்றிருந்தேன்.

 

பார்த்த இடங்களிலெல்லாம்

மாற்றங்கள் நினைவுகளைத்

தகர்த்திருந்தன. Continue reading பூக்காரப் பாட்டியிடமிருந்த காலம்

பறையன் எனச் சொன்னால் ஏன் நமக்குக் கோபம் வருகிறது? எதிர்வினை: இண்டர்லோக்: சாதிய கட்டமைப்பும் சாதிய எதிர்ப்புணர்வும்

முதலில் நம்மைப் பறையன் எனச் சொன்னால் ஏன் நமக்குக் கோபம் வருகிறது? அது சாதி சார்ந்து இழிவான வார்த்தை என்பதைத் தீர்க்கமாக நம்புவதால்தானே இப்படியொரு உடனடி எதிர்ப்புணர்வு? ஆழ்மனதின் எந்தப் பகுதியை அந்தச் சொல் தீண்டுகிறது? சாதி மீது இந்தச் சமூகம் கொண்டிருக்கும் அதீதமான நம்பிக்கையைப் பறையர் எனும் சொல் அசைத்துப் பார்ப்பதை முரணான ஒரு செயல்பாட்டின் மீது பதியும் நியாயமான எதிர்ப்பாகவே கருத முடிகிறது. Continue reading பறையன் எனச் சொன்னால் ஏன் நமக்குக் கோபம் வருகிறது? எதிர்வினை: இண்டர்லோக்: சாதிய கட்டமைப்பும் சாதிய எதிர்ப்புணர்வும்

“பறையனாக இருப்பதில் நமக்கு என்ன பிரச்சனை?”

குறிப்பு : ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்கள் நெடுங்கால‌மாக‌வே மிக‌ச் ச‌ம‌த்தாக‌ ஒளித்துவைத்து வ‌ள‌ர்த்தெடுக்கும் பார்ப்ப‌ன‌ர் ஏற்ப‌டுத்திய‌ சாதிய‌ அடையாள‌ங்க‌ளின் க‌றைக‌ளை நெம்பிக்காட்ட‌ பார்ப்ப‌ன‌ர் ஏற்ப‌டுத்திய‌ சாதிய‌ அடுக்குக‌ளையே க‌ட்டுரையில் சில‌ இட‌ங்க‌ளில் ஆயுத‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டியிருக்கிறது.

 

Continue reading “பறையனாக இருப்பதில் நமக்கு என்ன பிரச்சனை?”